India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <
சுதந்திர தின தேசிய பண்டிகை விடுமுறை நாளான நேற்று (ஆக.15) திருவாரூர் மாவட்டத்தில், 34 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; 32 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 66 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணியில் அமர்த்தியது கண்டறியப்பட்டு, அந்த 66 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கோப்பை – 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முன்பதிவு செய்ய இறுதி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வீரர்கள் மற்றும் அணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
➡️ தமிழகத்தின் 4-வது பெரிய நகரம்
➡️ மொத்த மக்கள் தொகை : 10.2 லட்சம்
➡️ மொத்த பரப்பளவு : 167 சதுர கி.மீ
➡️ ஆண்டு வருவாய்: ரூ.600 கோடி
➡️ மண்டலங்கள் : 5
➡️ வார்டுகள் – 65
➡️ ஆங்கிலேயர் வைத்த பெயர்: திரிசினோபோலி (Trichinopoly)
➡️ நகரமாக உருவெடுத்த ஆண்டு: 1866
➡️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
கோவை மாணவர்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வருமான மற்றும் சாதிச் சான்றுகள் அவசியம். https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800-599-7638 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க.
மது கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மது பாட்டில் விற்கப்படும்போது, MRP விலையுடன் கூடுதலாக ரூ.10 சேர்த்து வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும் ரூ.10 திரும்ப வழங்கப்படும். எனவே, மது அருந்துபவர்கள் அதை கீழே வீசிவிட்டு செல்லாதீர்கள். ஷேர் செய்யுங்கள்
தஞ்சையில் அமைந்துள்ள மனோரா கடற்கரை பலரும் அறிந்திடாத கடற்கரையாகும். இக்கடற்கரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனோரா கோட்டையும் கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளதுள்ளது. இந்த கோட்டை, 1814-1815 காலகட்டத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் படையை ஆங்கிலேயப் படை முறியடித்ததை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டதாகும். மேலும் இங்கு வீசும் இயற்கையான காற்று பலருக்கும் பிடித்த ஒன்றாகவுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
காங்கேயம், சிவன்மலை, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, இது தொடர்பான கூடுதல் விபரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
வேலூரில் பரப்புரையில் ஈடுப்பட எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் ‘காப்பி-பேஸ்ட்’ செய்து புதுப்பெயர் சூட்டி மீண்டும் வெளியிட்டு வருகிறார். அரசாங்கத்தின் தனிப்பட்ட சாதனை என்ற ஒன்றும் இல்லை. ஆட்சி முடியும் தருவாயில், விளம்பர நோக்கத்திற்காக தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தேர்தலுக்கு முன் அரசியல் பயன்பெறும் முயற்சி” என விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.