Tamilnadu

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடியில் ரூ.41 லட்சம் இழப்பு

image

சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பொன்முடி. இவர் சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து சைபர் கிரைமில்(1930) மற்றும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். உஷாரா இருங்க மக்களே. SHARE பண்ணுங்க

News August 28, 2025

அரியலூர்: கல்விக்கடன் முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படிப்பவர்களுக்கும் கல்வி கடன் சிறப்பு முகாம் (3.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெற அரசு சார்பில் முகாம் நடைபெற உள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து இந்த முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

கோவையில் பக்தர்களை கவர்ந்த பரோட்டா விநாயகர்!

image

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ரூ.10 லட்சம் சலவை நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் என விநாயக பெருமான் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டாவில் விநாயகர் உருவம் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

திருப்பத்தூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இதற்காக அரசு சிறப்பு முகாமை துவக்கியுள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்து இந்த முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை அருகே கீழகோதை நாச்சியார்புரம் காட்டு பகுதியில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 20 கிலோ சோர்சா வெடிகள் மற்றும் 30 குரோஸ் கருந்திரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

News August 28, 2025

சென்னையில் வேலை: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை.29-ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதில் 10th, 12th, ஐடிஐ, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து விபத்து

image

நேற்று காவிேரிப்பட்டினத்தில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் கார் பின்புறத்தில் மோதியது. காரில் இருந்து பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 28, 2025

சிறுமியை கர்ப்பமாகிய 16 வயது சிறுவன்

image

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன் 16 வயதுடைய சிறுமியிடம் கடந்த 2024ம் ஆண்டு முதல் நட்பாக பழகியுள்ளார். பின்னர் மார்ச் 15ம் தேதி காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமி 2 மாதம் கர்ப்பம் அடைந்ததை அடுத்து, புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!