Tamilnadu

News August 28, 2025

இரவில் சிறுத்தை உலா டிரோனில் கண்காணிப்பு!

image

ஊட்டியில் இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றது. இந்நிலையில் ஓல்டு போஸ்ட் ஆபீஸ், வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை நடமாடியதை தொடர்ந்து நேற்று மாலை இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் டிரோன் உதவியுடன் நகருக்குள் சுற்றும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 28, 2025

ஈரோடு 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் உட்பட மற்றும் 7 பேர் பணியிட மாற்றம்.

News August 28, 2025

கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (ஆக.28) “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் கரூர் கலைக் கல்லூரி அரங்கம், புகலூர் கோம்புபாளையம், கடவூர் வரவனை, அரவாக்குறிச்சி வெங்கடாபுரம் மற்றும் தோகைமலை நாகனூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

News August 28, 2025

தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளன. அவசரநிலைகளில் பொதுமக்கள் இந்த எண்ணங்களை பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

புதுகை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 28, 2025

மனநல மையங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி, ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினால், அனுமதியின்றி செயல்படும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் (ஆக.27) எச்சரித்துள்ளார்.

News August 28, 2025

சென்னையில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (28.08.2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. மணலி, மாதவரம், இராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 10 மண்டலங்களின் 10 வார்டுகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.

News August 28, 2025

திருப்பூர் அருகே சாலை விபத்து விவசாயி பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் விவசாயி. இவருக்கு வட பருத்தி ஊரில் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இன்று விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

News August 28, 2025

அரியலூர்: படிப்பவர்களுக்கும் கல்வி கடன் முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படிப்பவர்களுக்கும் கல்வி கடன் மேளா/சிறப்பு முகாம் (3.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!