Tamilnadu

News August 16, 2025

50% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

புதுவை: தனியார் நிறுவன காவலாளி மர்ம இறப்பு!

image

துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல வேலைக்கு சென்றவர், காலையில் நாற்காலியில் அமர்ந்தபடி வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 16, 2025

குமரி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ, WHATSAPP எண்ணிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் எண்கள்: 7708239100,8122223319…. SHARE பண்ணுங்க..!

News August 16, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்க மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (0457-5240388, ) அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News August 16, 2025

தூத்துக்குடி: SC & ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்

image

தூத்துக்குடி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு 3 மாத இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும். 18-30 வயதுடைய இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *இதை ஷேர் செய்து உதவுங்கள்*

News August 16, 2025

ராமநாதபுரம்: SC & ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்

image

ராமநாதபுரம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு 3 மாத இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும். 18-30 வயதுடைய இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *இதை ஷேர் செய்து உதவுங்கள்*

News August 16, 2025

நெல்லையில் 35.100 சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW!

image

நெல்லை மாவட்ட மக்களே நமது நெல்லையில் 35,100 சம்பளம் வழங்கும் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் கடைசி (ஆகஸ்ட்.16) எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நெல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுங்க…. நமது நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வேலையை MISS பண்ணிடாதீங்க… மற்ற்வர்களுக்கு SHAREபண்ணி ஞாபகபடுத்துங்க…

News August 16, 2025

மதுரை மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.செப்.28 ல் குரூப் 2 பணியிடங்கள் உட்பட 645 காலியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். பணம் கொடுத்து சேருவதற்கு பதில் அரசின் இலவச வகுப்பில் சேர்ந்து பயனடைங்க மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

சேலத்தில் உதவித்தொகை வேண்டுமா? APPLY NOW

image

சேலம் மாணவர்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வருமான மற்றும் சாதிச் சான்றுகள் அவசியம். https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 1800-599-7638 அழைக்கவும். இதனை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!