Tamilnadu

News August 27, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்

image

தி.மலை மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பை தொடர மாணவர்களுக்கு “நான் முதல்வன் திட்டத்திற்கு கீழ் “உயர்வுக்கு படி” சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகிறது.(ஆக.28) திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசினர் கலைக் கல்லூரியில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாணவர்கள் பங்கு பெறலாம்.

News August 27, 2025

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பை முடித்த இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கு உதவியாக வேளாண் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

திருச்சி மாவட்டத்தில் 1182 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1182 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் விநாயகர் சிலைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிலை அமைப்பாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 29-ஆம் தேதி சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.

News August 27, 2025

BREAKING: இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இன்று (ஆக.27) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பண்டிகை நாளான இன்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

News August 27, 2025

சேலத்தில் ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி

image

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

News August 27, 2025

வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை- ஆட்சியர்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா வரும் ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

ஆகஸ்ட் 28 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

image

சேலம் ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்
▶️ துட்டபட்டி வெள்ளையன் மஹால் அருகில் துட்டப்பட்டி மேல்நிலைப்பள்ளி
▶️ ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️ தேவூர் அன்னம்மாள் கல்யாண மண்டபம் கனியாள்பட்டி
▶️ ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்காடு ▶️தலைவாசல் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் காட்டுக்கோட்டை
▶️மேச்சேரி மல்லிகார்ஜுனா திருக்கோவில். இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

விழுப்புரம்: உங்கள் நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

image

விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<> க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து விழுப்புரம் மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

News August 27, 2025

கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

image

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள்(அ)உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

News August 27, 2025

செங்கல்பட்டு: நிலத்தை கண்டுபிடிக்க இதோ வழி

image

செங்கல்பட்டு மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து செங்கல்பட்டு மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

error: Content is protected !!