India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சீர்காழி அடுத்த வாணகிரி பகுதியில் இன்று 27/8/2025 புதன் கிழமை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வாணிகிரி மேலையூர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் வைத்து படைத்து வருகிறார்கள்.
விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு மட்டுமே https:// Coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். காரமடை வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த சுற்றுலாவில் பழங்குடியினரின் நடன நிகழ்ச்சியும் அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது.
கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் ஸ்வீட்ஸ் என்ற கடையில் 12வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வித்தியாசமான முறையில் 121 கிலோவில் மெகா சைஸ் லட்டு செய்து விநாயகரை வழிபட்டனர். இந்த மெகா லட்டுவை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் பொட்டை கொல்லை அருகே கார், பைக் மோதலில் (65) வயது முதியவர் உயிரிழந்தார். சாலையில் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கார் திடீரென மோதியது. கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கார்டுக்காக மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூங்குடியைச் சேர்ந்தவர் குமாரராஜா(31). இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டினம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சூரியா(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் கிராமத்தில் தனது தாயுடன் பள்ளிக்கு சென்ற ஹாலிசா என்ற சிறுமியை அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிதத்தில் ஹாலிசா பலத்த காயம் அடைந்து கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் பெருமளவு நடைபெறுவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று 4 மி.மீட்டரும், நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிக பட்சமாக 96.8 டிகிரியாகவும் இருக்கும்.
Sorry, no posts matched your criteria.