India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அறிவிப்பு கடந்த 16.03.2024 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் குறுஞ்செய்தி மூலமாகவோ சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவை கடலோர காவல்படை போலீசார் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் இன்று கடலுக்கு சென்று மீன் பிடித்த மீனவர்களிடம் உரிமம் உள்ளதா?, மது, பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர். மேலும், கடலில் புது நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். படகுகளில் மதுபானம், பரிசு, பணம் கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா உள்ளவர்கள் வீடுகளுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மார்ச் 24ஆம் தேதிக்குள் நேரில் சென்று படிவம் 12டி வழங்க உள்ளனர். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் 20.03.2024 இன்று காலை 9 மணியளவில் விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்த மது பிரியா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 14,219 பேர், 40 சதவீதத்திற்கும் மேல் உடல் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் 11,096 பேர் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் மக்களவை தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து மாா்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அவனியாபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முனியசாமி 55.இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்த முனியசாமி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்தவர் ரங்கநாதன்(63). குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து இந்த நிலையில் நேற்று (மார்ச்.19) வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களின் பாலியல் வன்முறையை மறைக்க முயற்சித்து, குழந்தையின் பெற்றோர்களை மிரட்டிய பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு வழங்கினர்.
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சந்திரகாசன் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜவீதியில் உள்ள தனியார் கணினி மையத்தில் இன்று காலை முதல் பெண்கள் குவிந்தனர். சுயமாக கைத்தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,0,000 வரை வட்டி இல்லாத கடன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கடன் தொகையை பெறும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்வதற்காக கணினி மையத்தில் பெண்கள் குவிந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.