India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ், திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் என 4 பேர் அறிவிக்கப்பட்டு நான்கு முனை போட்டி இருந்து வருகிறது. இதனால் நீலகிரி தொகுதி தமிழகத்திலேயே ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.
அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூந்தமல்லியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பூந்தமல்லி அரசு பள்ளி அருகே கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் குடிப்பதை நிறுத்தி வெற்றிகரமாக 100 நாட்கள் ஆனதாகவும் தனக்கு இருந்த ரூ. 80 ஆயிரம் கடனை அடைத்து விட்டதாகவும் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் பேனர் வைத்துள்ளார். இது அப்பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.
சேலம் மாவட்டம் நாழிகல்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.4.75 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சேலம் தெற்கு வட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாங்குநேரியில் மார்ச்-25-ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளார். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வது குறித்து இன்று மாலை நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுர நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் எங்களின் தொண்டர் பலத்தை நிருபிப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.21) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் யாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் என பலரும் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 25 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு நடைபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தீவிரம் அடைந்திருப்பதால், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாகாணத்திற்கு தலைமையால் சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கு தஞ்சை திமுக வேட்பாளராக தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி என்பவரை திமுக தலைமை அறிவித்துள்ளது. பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.