India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய், ராமநாதபுரம் துணை இயக்குனர் அப்ராம்சா ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உரிய விதிகளை பின் பற்றாத விதை விற்பனை நிலையங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 635 மதிப்புள்ள விதை இருந்த களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், முகமை ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் மகளிர் திட்ட பணியாளர்களுக்கு மன நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இணை இயக்குனர் சித்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர்கள் சரவணன், சண்முக வடிவு, சந்திரசேகரன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீரங்கபாணி மனநலம் குறித்த பயிற்சி அளித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2 நாட்களில் புதுச்சேரியில் 21 செ.மீ. மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய பாதிப்பு குறித்து துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர் என்றார்.
காவிரி கரையோரங்களில் தொடர் மழை காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி 54,200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரம் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 12,800 கன அடியும், கொள்ளிடத்தில் 41,000 கன அடியும், கிளை வாய்க்காலில் 400 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (23.10.2025) நடைபெற உள்ளன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பொதுமக்களுக்கு இலவச சோதனை, மருந்து வழங்கல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, அது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அந்த நபர்களை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1.சக்திவேல் (23) பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம். 2.மனோஜ் (22), வீரப்பன் சத்திரம், இருவருக்கும் தலா 5000/- அபதாரம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழைக்கு இடைவேளையாக, இன்று (அக்.23) காலை வானம் தெளிவாக காணப்பட்டது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் தங்கள் பள்ளிகளுக்குச் சென்றனர். மாவட்ட வானிலை மையம் தெரிவித்ததாவது – அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மேகமூட்டம் காணப்பட்டாலும், மழைக்கு வாய்ப்பு.
தென்காசி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <
BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
நெல்லை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
Sorry, no posts matched your criteria.