Namakkal

News October 20, 2025

நாமக்கல் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டம் (ம) திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய சட்டப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் https://namakkal.dcourts.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து அக்.28ந் தேதிக்குள் தபால் மூலமோ (அ) நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்பணி தற்காலிகமானது.

News October 20, 2025

நாமக்கல்: ‘இந்த’ தவறுகளை செய்யாதீர்கள்!

image

நாமக்கல் மக்களே தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கானது. இந்நாளில் கோபப்படுவது, சண்டையிடுவது தவிர்க்கவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும். அழுக்கு அல்லது அலட்சியம் உண்டானால் நன்மை கிடைக்காது என்பது ஐதீகம்; மேலும் இரவில் தீபம், விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிர வைக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் இருட்டாக வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை ஷேர் பண்ணுங்க!

News October 20, 2025

நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News October 20, 2025

நாமக்கல் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டம் (ம) திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய சட்டப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் https://namakkal.dcourts.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து செப்.28ந் தேதிக்குள் தபால் மூலமோ (அ) நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்பணி தற்காலிகமானது.

News October 20, 2025

புதுச்சத்திரம்: கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து!

image

புதுச்சத்திரம் மேம்பாலத்தில் கண்டைனர் லாரியின் இடது பின் பக்க டயர் பஞ்சர் காரணமாக டிரைவர் வேறு டயரை மாற்றி கொண்டிருக்கும் போது, திண்டுக்கல் நோக்கி 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

News October 20, 2025

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி வாழ்த்து

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. ஒளிமயமான இந்த திருநாளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறும், மேலும் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 19, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.19 நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (செல்வராசு -9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 19, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (19.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர்-19) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர்-20) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 19, 2025

நாமக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!