India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை இந்திரா நகர் கிராமத்தில், கண்மணி என்பவர் போலியாக பல மாதங்களாக கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வருவதாக அந்தப் புகாரை எடுத்து குமாரபாளையம் தலைமை மருத்துவர் பாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் விற்பனை போலீசார் நேற்று இரவு கண்மணியை கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.94 ஆக அதிகரித்துள்ளது. முட்டை விலை 550 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு அணிவிக்க 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 38 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான KRN. ராஜேஷ்குமார் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 4 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும், அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1. நாமக்கலில் ஒரு லட்சத்து எட்டு வடமாலை செய்யும் பணி துவக்கம்
2.நாமக்கல்: பணி நியமன ஆணை ஆட்சியர் வாழ்த்து
3.”டாப் 10″ இடத்தை பிடித்த மோகனூர் அரசுபள்ளி
4. நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
5.திருச்செங்கோட்டில் அருகே பெரும் விபத்து தவிர்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – செந்தில்குமார் (9498177818), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
மாநில அளவிலான ஏடிஎல் மாரத்தான் நடத்திய புதுமை படைப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான போட்டி நடைபெற்றது. புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் “டாப் 10” இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு அங்கிகாரம் கிடைக்கும்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிளை, நகரம் உள்ளிட்டவைகளுக்கு தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் மாநகர் தலைவராக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி முன்னாள் நகரத் தலைவர் சரவணன் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல்லில் இன்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான பி.தங்கமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜி.பி.ரமேஷ் நன்றியுரை கூறினார்.
Sorry, no posts matched your criteria.