India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் அன்னை கொள்முதல் விலை ரூ 4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பனி குளிர் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டையின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.65 ஆக நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துகாளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில், பாராளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அட்மா குழு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் வரும் (21.02.2025) அன்று 11 மணிக்கு நடைபெற உள்ளதால், விவசாயிகள் & சங்கப்பிரதிநிதிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு விவரங்கள் மற்றும் மானியத்திட்டங்கள் அறிந்துகொள்வதுடன் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் உமா அறிக்கை.
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க சிறப்பு கடன் வழங்குவது தொடர்பான விளக்கக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது. நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விளக்கக் கூட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று பயனடையலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதபிறவி (9498167158), ராசிபுரம் – சங்கரபாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. மாசி மாத புதன்க்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு . காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் எனஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றன. பின் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார், இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 01.03.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (19-2-2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ.30 – 36, தக்காளி ரூ.16-18, வெண்டைக்காய் ரூ 36, அவரைக்காய் ரூ.50 – 55 கொத்தவரை ரூ.45, முருங்கை ரூ.90முள்ளங்கி ரூ.20, புடலங்காய் ரூ.22-25, பாகற்காய் ரூ.42, பீர்க்கங்காய் ரூ.44, பூசணிரூ.20, பரங்கி ரூ.16, மாங்காய் ரூ.60தேங்காய் ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Sorry, no posts matched your criteria.