Namakkal

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, நாமக்கல் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

News February 22, 2025

போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண் கைது

image

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு சொகுசு பேருந்து சென்றது. அதனை வழிமறித்து காவல் துறையினர் பரிசோதனை செய்ததில், பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு 39 கிலோ போதைப் பொருள்கள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து போதை போர்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

News February 21, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 21, 2025

குடிநீர் குழாய் உதிரி பாகங்களை திருடியர் கைது

image

நாமக்கல்: குமராபாளையம் , பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள வீடுகளில், தண்ணீர் குழாயில் உள்ள பித்தளை வால்வுகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிவந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், குமராபாளையம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ஒட்டமெத்தை பகுதியில் உள்ள நவீன் ராஜ் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள வால்வுகளை மீட்டு, அந்த நபரை கைது செய்தனர்.

News February 21, 2025

நாமக்கல்: வேலைவாய்ப்பு முகாம்

image

பாச்சலில் வருகின்ற 01/03/25 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில, ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இம்முகாம் ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனத்தில் நடைபெறும். இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணி இடங்களை நிரப்ப உள்ளன. அனுமதி இலவசம்.

News February 21, 2025

மலேசியா செல்ல உள்ள மாணவனை வாழ்த்திய அமைச்சர் 

image

இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, அத்தனூர் பேரூரை சார்ந்த மெய்யழகன் அவர்களின் மகனும் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவனுமாகிய சுஜய் நிவாஷ் பள்ளிகல்வி துறை சார்பாக 2023-24ம் ஆண்டில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் ஒவியப்போட்டியில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று மலேசியா நாட்டிற்கு சுற்றுலா செல்லவுள்ளார். அம்மாணவனை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்தினார்கள்.

News February 21, 2025

நாமக்கல் கிழக்கு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நாளை மதியம் 2 மணிக்கு நாமக்கல் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் இராமலிங்கம் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

News February 21, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. மாசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் எனஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார், இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

News February 21, 2025

குமாரபாளையத்தில் லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை

image

குமாரபாளையம் அருகே கல்லாங்காடு வலசு பெத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து லாரி ஓட்டுநர். வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவரிடம் உங்களுடைய சாக்கடைகளை நீர் தனது வீட்டிற்கு வருவதாக கூறி நேற்றிரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ் மற்றும் அவருடைய தந்தை ஆறுமுகம் தாக்கியதில் அங்கமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 21, 2025

இராசிபுரம் கவுன்சிலர்க்கு அடி உதை !

image

இராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் சந்து கடைகளில் மது மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன். இந்த நிலையில் அண்மையில் புதிய பேருந்து நிலையம் அருகே வார்டு செயலாளருக்கும் நகர மன்ற உறுப்பினருக்கும் மாமூல் வழங்க கோரி வாக்குவாதம் ஏற்பட்டது. மாமூல் கொடுக்காததால் சந்து கடையில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதை வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து கவுன்சிலர் வீட்டிற்கு சென்று அவரிடம் கேட்டதில் அடிஉதை ஏற்பட்டது.

error: Content is protected !!