India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும்.<
பெரியகோம்பை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து, ஆர்.ஐ., புஷ்பா தலைமையில் வருவாய்த்துறையினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மண் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரி மற்றும் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது.
நாமக்கல்லில் உண்மைக்கு புறம்பாக கையெழுத்து பெற்ற நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடவத்தூரை சேர்ந்த பெரியசாமி நாமக்கல் எஸ்பியிடம் மனு அளித்தார். சிலை கடத்தலில் ஈடுபட்டவர்கள்களை காப்பாற்ற என்னை மிரட்டி, நீங்கள் தொடர்ந்து கோயிலில் வேலை செய்ய வேண்டும் என்றால் இந்த லெட்டரில் கையெழுத்து போட சொல்லி சிக்க வைப்பதாக பெரியசாமி மனுவில் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 24ஆம் தேதி நடைபெற்றது இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 4.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது வெயில் குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதனிடையே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.90 என்ற அளவில் நீடிக்கிறது
நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள NTC ஓட்டுநர் பயிற்சி மையம் செயல்படுகிறது இந்த பயிற்சி மையத்தில் இலவசமாக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி இலவசம் அளிக்கப்படுகிறது இலவச
பயிற்சி வகுப்புடன் ஹெவி லைசன்ஸ் இலவசமாக எடுத்து தரப்படும் எனவும் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதல் விவரங்களுக்கு
73598 24694, 98434 69499 என்ற எண்ணிகளில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து தகவல் தெரிவிக்காத நிலையில் வி.ஏ.ஓ.க்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைக்கண்டித்து, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வி.ஏ.ஓ.க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத திங்கள்க்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாமக்கல்லில் மட்டும் 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
நாமக்கல், கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள கரடு புறம்போக்கில் அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதில் 23 வாகனங்கள் பறிமுதல் செய்தும், ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிறகு அனுமதியின்றி கல்குவாரி இயக்கிய விவகாரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்காத நாமக்கல் ஆர்டிஓ உட்பட இரண்டு விஏஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.