India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (27/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு ,வேலூர் – சுரேஷ்குமார் (9498168363) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத வியாழக்கிழமை அம்மாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். தகுதியானவர்கள் விண்ணப்பத்தினை www.tnpch.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 2 பிரதிகள் மற்றும் சி.டி பதிவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி (15/04/2025) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.தகவல் அறிந்து வந்த அமைச்சர் மதிவேந்தன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா மாணவரின் பெற்றோர் உறவினருக்கு ஆறுதல் கூறி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் உடலை வாங்க மறுப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பங்குபெரும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28/2/2025 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல், ராசிபுரம் சிவானந்தா சாலை மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் கவின்ராஜ் (14), என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கீதா ராணி. இவர் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வெளியூருக்கு சென்று நேற்று வீடு திரும்பினார். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை திருட்டு போயின. அதிர்ச்சி அடைந்த கீதா ராணி பரமத்தி போலீசார்க்கு தகவல் கொடுத்தார். அதனை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல்லிலிருந்து நாளை (பிப்.26) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும் (20671), மாலை 5:25 மணிக்கு நாமக்கல்லிலிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல பெங்களூரூ-மதுரை வந்தேபாரத் ரயிலிலும் (20672) டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.