India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று மோகனூர் வட்டம் அக்ரஹார மணப்பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்பட உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று, கொண்டிசெட்டிப்பட்டி, விநாயகர் தெரு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு குழந்தையின் உடல் எடையை எடை மெஷின் மூலம் சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டம் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக நவ.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் மாற்றப்பட்டு, அடுத்த வாரம் நடைபெறும்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார் இன்று (09.11.2024) நாமக்கல் மாநகராட்சி, கோட்டை உயர்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா உள்ளார்.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த வாரமும் நடைபெற உள்ளது. இதில் பெயர் நீக்கம் செய்வது மற்றும் திருத்தங்கள் செய்வது போன்ற தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே நாமக்கல் மாவட்டம் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தினை விட்டு கொடுக்க விருப்பமுள்ளவர்கள் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வலைதளத்தின் www.tnpds.gov.in மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மண தாஸ் (9443286911), இராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று திடீரென வயிற்று வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பள்ளிபாளையத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.