India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து அமைக்கப்பட்டு இன்று 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. இதனால் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கடையில் வியாபாரம் குறைந்ததால் வருத்தமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 1197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர், இதில் 580 தேர்வர்கள் போட்டித் தேர்வினை எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்- இடைநிலை, நிறுவன செயலாளர்- இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் www.tahdco.com இணையதளத்தில் கூடுதல் விபரங்களை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அக் 22 ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று (நவ 10) அதிகாலை 4.30 மணி முதல், பேருந்துகள் இயக்கப்பட்டன. இனி இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்படும்.
டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி, பி.ஜி.பி. இன்டர்நேஷனல் பள்ளி, பி.ஜி.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற மையங்களில், அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார் (ஓய்வு), மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இன்று முதல் செயல்பட தொடங்குவதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு நேற்று மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி செயற்பொறியாளர் ஆ.சண்முகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இ.எஸ்.முருகேசன், முருகன், துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
➤மின்னணு முறையில் பயிர் கணக்கீடு செய்யும் பணி ➤புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு ➤வாக்காளர்கள் சிறப்பு முகாம் ➤தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு ➤ரேஷன் கார்டுதாரர்களுக்கு அறிவிப்பு ➤தனியார் கல்லூரி பேராசிரியருக்கு விருது
Sorry, no posts matched your criteria.