India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.89 ஆக சரிவடைந்துள்ளது. மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டு, கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவம்பவர் 15ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தர்வகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை அழைக்கலாம்.
அசாம் மாநில தொழிலாளர்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று ஆர்ப்பாட்டம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இன்று சிபிஎம் சார்பில் சின்ன எலச்சிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜீ தலைமையில் கவுன்சிலர் சுரேஷ், பெரியசாமி, சுந்தரம் ஒன்றிய குழு உறுப்பினர் கிட்டுசாமி பாலகிருஷ்ணன், ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
➤நாமக்கல் நகரில் எம்.பி திடீர் ஆய்வு ➤தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு ➤நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர் ➤ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு- முன்பதிவுக்கு அழைப்பு ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் ➤முட்டை விலையில் மாற்றமில்லை ➤குளிக்கச் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – ரெங்கசாமி (9487539119), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் துறையூர், திருச்சி சாலை ஆகிய இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது அடுத்து திருச்சி சாலை பயணியர் மாளிகை அருகில் துறையூர் மற்றும் திருச்சி பேருந்துகள் பயணிகளை இறக்கி விடும்போது பயணிகள் சாலையை கடப்பதற்கு உரிய வகையில் வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து போலீசார் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 3ஆவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை , , ,மார்கழி மற்றும் தை மாதங்களுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வதற்கு விருப்பமுள்ள நபர்களுக்கு முன்பதிவு நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04286-233999 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று(11.11.24) திங்கட்கிழமை காலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வடை மாலைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயபெருமானை வழிபட்டுச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் வருகிற 16- ந் தேதி (சனிக்கிழமை), 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 23-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை பொது மக்கள் அளிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.