Namakkal

News October 23, 2025

நாமக்கல் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க

News October 23, 2025

நாமக்கல்லில் இப்ப்படியும் மோசடி!உஷார்

image

நாமக்கல் மக்களே சமீப காலமாக, அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் ஆன்லைன் செய்திகளால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக குறுகிய காலத்திலேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, இந்த மோசடி கும்பல் பொதுமக்களை குறிவைக்கிறது. எனவே, இது போன்ற ஏமாற்று அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 23, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

நாமக்கல்லில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

image

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் அக்.30ந் தேதி காலை 09.30 மணி முதல் 1 மணி வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு/தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 01.30 மணி முதல் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெறும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்-22 நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 22, 2025

நாமக்கல் முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்.22) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்.23) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 22, 2025

எம்.பி ராஜேஷ்குமார் நாளை நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிரல்!

image

மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ராஜேஸ்குமார் நாளை (அக்.23) கலந்துகொள்ளும் நிகழ்ச்சி விவரம்: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள முருங்கப்பட்டி, நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, பல்லவநாயக்கன்பட்டி, வருதராஜபுரம் ஆகிய ஒன்றியங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இறுதியாக மாலை 6 மணி அளவில் நாமக்கல்லில் பார்வையாளர்களை சந்திக்கிறார்.

News October 22, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலுக்கு எதிரே எழுந்துள்ள, உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், ஐப்பசி மாதத்தின் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு சொர்ண அபிஷேகம் இன்று (22.10.2025) காலை நடைபெற்றது. அப்போது தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News October 22, 2025

வேளாண் பயிர்களின் களை மேலாண்மை பயிற்சி!

image

நாமக்கல் லத்துவாடி அருகேயுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (அக்.23) காலை 10 மணி முதல் 4 மணி வரை வேளாண் பயிர்களின் களை மேலாண்மை பற்றிய இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பு முனைவர் செ.அழகுதுரை தலைமையில் நடைபெறுகிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் தொலைபேசி எண்களை 04286-266345, 99430 08802 தொடர்புகொண்டு முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!

image

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. இதனிடையே கொல்லிமலையில் பெய்து வரும் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க நாமக்கல் மாவட்ட வனத்துறை தடைவித்துள்ளது.

error: Content is protected !!