India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶️ இதற்கு உங்களது CIBIL 720ஆக இருக்க வேண்டும்.
▶️ <
▶️ அந்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார், பான், வருமான சான்றிதழ், பணி சான்றிதழ் ஆகியவற்றௌடன் இணைத்து அருகே உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
அங்கு உங்களின் தகுதி சரிபார்க்கப்பட்டு உங்களின் சம்பள வங்கிக் கணக்கிற்கே லோன் தொகை வழங்கப்படும். SHARE IT
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கபிலர் மலை, அய்யம்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், இருக்கூர், சேளூர், சாணார்பாளையம், அண்ணா நகர், தண்ணீர் பந்தல், கோணங்கிப்பட்டி, பொன்னேரி, கெட்டிமேடு, தூசூர், பொம்மசமுத்திரம், கனவாய்பட்டி, ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(ஜூலை 8) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE!
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை, நேற்றும் (ஜூலை 7) 9-வது நாளாக ரூ.5.75 ஆக நீடிக்கும் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.97-க்கும், முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ.106-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 7 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- பாலசுப்ரமணியம் ( 9442851418), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), பள்ளிபாளையம் – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – மருதபாண்டி ( 9344457738), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 7) நாமக்கல் – வெங்கடாச்சலம் ( 9445492164), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
நாமக்கல்: குமாரமங்கலம் அருகே, இராசிபுரம் மற்றும் நாமக்கல் பிரிவு ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மாலை 4 மணியளவில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு தலை மற்றும் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கரட்டுப்பாளையம் போலீசார், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 68 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974687>>தொடர்ச்சி<<>> (1\2)
▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
நாமக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் . ஷேர் பண்ணுங்க !
கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். நேற்று காலை அவர். மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.