India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று வெறிநாய் கடித்ததில் 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

மக்களவை 24 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாமக்கல் மக்களவை பொது தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்ட நாயுடு நல சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும், யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு 26 ஆம் ஆண்டு விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான ,வானதி சீனிவாசன் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, நாளை திருச்செங்கோடு, குருசாமிபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வழியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்டம் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி, தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தலைமையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமக்கல், ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனத்தில்பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவா் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தாா். விழாவில் சென்னை டாக் சாப் அகாதெமியின் முதன்மைச் செயல் அலுவலரும், ஊக்குவிப்பு பேச்சாளருமான சி.கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். இதில், 1500 -க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 107.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரி ஆகவும், காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 2,900 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ.6,500 முதல் ரூ.7,750 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ.7,769 முதல் ரூ.8,400 வரையிலும், மட்ட ரகம் ரூ.4,499 முதல் ரூ. 6,295 வரையிலும் என மொத்தம் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போனது.
Sorry, no posts matched your criteria.