India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.23 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 23) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 24) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.10.2025) இரவு ரோந்துப் பணிக்குக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைக்கு உட்கோட்ட அதிகாரியை தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் மறைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 23-ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு: எருமப்பட்டி 20 மிமீ, குமாரபாளையம் 3.20 மிமீ, மங்களபுரம் 12.60 மிமீ, நாமக்கல் 90 மிமீ, பரமத்திவேலூர் 35 மிமீ, புதுச்சத்திரம் 17மிமீ, ராசிபுரம் 22 மிமீ, சேந்தமங்கலம் 61.20 மிமீ, திருச்செங்கோடு 18 மிமீ, ஆட்சியர் வளாகம் 19 மிமீ, கொல்லிமலை செம்மேடு 35 மிமீ என மொத்தம் 423 மிமீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இன்று காலை சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேந்தமங்கலம் பகுதிக்கு இன்று மதியம் வருகை தர உள்ளார்.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற, முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக சரிவடைந்து உள்ளது. அதேபோல் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலை, கிலோவுக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு ரூ. 97 ஆக விற்பனையாகி வருகின்றது.

நாமக்கள்: பள்ளிப்பாளையம் பகுதிகளில் இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள் செல்போனில் பேசுவது தவிர்க்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களின் பாதுகாப்பே முதன்மை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்,” என மின்வாரிய உதவி பொறியாளர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.