India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . இதில் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி விஜயகுமார் காவல் துணை கண்காணிப்பாளர்- 9498104763 உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் நாமக்கல்: வெங்கடாசலம்- 9445492164, இராசிபுரம்: அம்பிகா- 9498106528, திருச்செங்கோடு: ரஞ்சித்குமார்- 9092987019, வேலூர்: ஷாஜகான்- 9498167357 இரவு நேரத்தில் பணிக்கு மற்றும பயணம் செய்வோர் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த பல்வேறு தனியார் அமைப்புகளின் சார்பில் ‘நம்ம நாமக்கல்’ என்ற பெயரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, வரும் அக்டோபர் 6ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 78457 44981 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 26 ஆம் தேதி மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் தகுதியான சான்றிதழை வைத்து கல்வி கடனை பெற்றுக் கொள்ளலாம் எனவும், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு செல்வப் பெருந்தகை தலைமையில் கணக்கு குழு உறுப்பினர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நாளை 25/9/2024 காலை 9 மணி முதல் மேற்கண்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த ஆய்வில் தொடர்புடைய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
நாமக்கல் மாநகராட்சி, அத்தனூர் அருகே உள்ள குட்டலாடம்பட்டி கிராமத்தில் ராசம்மாள் (78) வசித்து வருகிறார். இன்று இவர் வீட்டின் அருகே இருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர்கள் அவரை உயிருடன் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள “சிலம்பொலி செல்லப்பன் அறிவகத்தில்” அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலம்பொலியாா் முழுவுருவச் சிலைக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் எம்பி, மற்றும் தமிழறிஞா்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், குடும்பத்தினா், உறவினா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் 26ஆம் தேதி வியாழக்கிழமை அன்று 11 மணிக்கு நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி என அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா இன்று (24.9.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தேர்தல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல்: கொண்டிசெட்டிப்பட்டி, கணபதி நகரில்1,821 சதுர மீட்டர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த காலி இடத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ‘மதுரை வீரன்’ சுவாமி கோவில் என்ற பெயரில் கற்களை வைத்து சில நாட்களாக தினசரி பூஜை செய்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் வந்ததையடுத்து, அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என நேற்று மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மாநில அரசால் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நேற்று (23.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அவர்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களை ஆட்சியர் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.