Namakkal

News May 16, 2024

நாமக்கல் அருகே அடுத்தடுத்து வருமான வரி சோதனை

image

திருச்செங்கோடு அடுத்த எஸ் கே வி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் கோல்டன் ஹார்ஸ் ரவி திருச்செங்கோடு பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார். அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்

News May 16, 2024

நாமக்கல்:கல்வி நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை

image

திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் மகளிர் கல்லூரி நிறுவனமான விவேகானந்தா கல்லூரி நிறுவனத்தில்வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது காலை 6:00 மணி முதல் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.மாணவியர் சேர்க்கை நடைபெறும் நிலையில் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 16, 2024

BREAKING திருச்செங்கோட்டில் ஐடி ரெய்டு

image

நாமக்கல் மாவட்டம் இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா மருத்து கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய கல்வி நிறுவனத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. சேலம் , கோவையை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 16, 2024

நாமக்கல்: 9 செ.மீ மழைப்பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோகனூர் 9 செ.மீட்டரும், நாமக்கல் AWS பகுதியில் 3 செ.மீட்டரும், புதுச்சத்திரம் பகுதியில் 2 செ.மீட்டரும், மங்கலபுரம் பகுதியில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சமீபமாக மழைபொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

image

குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம்  பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58)  மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 16, 2024

நாமக்கல் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் தேவையற்ற வதந்திகளையும் மற்றும் தேவையற்ற போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் சமூக வலைதளத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

News May 16, 2024

நாமக்கல்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தல் நாமக்கல் மாவட்ட வாக்கு எண்ணும் மையயமான திருச்செங்கோடு, எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளையும் மையத்தினையும் ஆய்வு செய்தார்.

News May 15, 2024

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனிவரும் நாள்களில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். பகல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் , இரவு வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

News May 15, 2024

நாமக்கல்: தலைவர் சுற்றுப் பயணம்

image

நாமக்கல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை வரும் 14.05.24 முதல் 17.05.24 வரை நான்கு நாட்களுக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடர்பாளரும், மேற்கு மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளரும், ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவருமான டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

நாமக்கல் அருகே ரூ.95 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

image

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.  இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.16,002 முதல் ரூ.19,705 வரையிலும், உருண்டை ரகம் குவிண்டால் ரூ.14,827 முதல் ரூ.17,042 வரையிலும், பனங்காலி ரகம் குவிண்டால் ரூ.21,384 முதல் ரூ.26,899 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1,150 மூட்டை மஞ்சள் ரூ.95 லட்சத்துக்கு ஏலம் போனது.

error: Content is protected !!