Namakkal

News May 29, 2024

சாலையோரம் சிம் கார்டு விற்பனை தடை செய்ய மனு

image

சாலையோரங்களில் சிம் கார்டுகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் அவர்களை இன்று (29/05/2024) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

News May 29, 2024

நாமக்கல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில், இடிந்த கட்டிடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின் மாதிரி ஒத்திகை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதை ஒட்டி, அதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நடைபெற்றது. அரசு அதிகாரிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

News May 29, 2024

நாமக்கல் மாணவர்களுக்கு அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, +1,+2 தேர்ச்சி,தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி,டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் 10.05.24 முதல் 07.06.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

நாமக்கல்: 100 சதவீதம் தேர்ச்சி.. பாராட்டு சான்றிதழ்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

News May 29, 2024

நாமக்கல் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 122 சுற்றுகள் நடைபெறும்

image

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 122 சுற்றுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தப் பணியில் 306 போ் ஈடுபடுகின்றனா். கூடுதலாக 306 போ் காத்திருப்பில் வைக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனர்

News May 29, 2024

முட்டை விலை கடந்த 3 நாட்களில் 60காசுகள் சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 60 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News May 28, 2024

நாமக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மரு ச.உமா தலைமையில் வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வேட்பாளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடை பெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 28, 2024

நாமக்கல் தத்தகிரி முருகன் கோயில் சிறப்பு!

image

நாமக்கல், முத்துகாப்பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ளது தத்தகிரி முருகன் கோயில். இந்த கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இந்த கோயிலில், பல சித்தர்கள் தவமிருந்தாக கூறப்படுகிறது. பழமையான கோவிலான, இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார்.

News May 28, 2024

நாமக்கல் கலைக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்

image

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.2024-2025ம் ஆண்டிற்கான இக்கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தரவரிசை அடிப்படையில் மின்னஞ்சல் வாட்ஸ்அப் கைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவரிசை பட்டியல் aagacnkl.edu.in என்ற கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

நாமக்கல்: ஜூன் 5 ஆம் தேதி ஓவியப் போட்டி

image

நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் வெள்ளி விழா டிரினிட்டி சிபிஎஸ்இ கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பசுமை தமிழக மக்கள் இயக்கத்துடன் இணைந்து உலக சுற்றுசூழல் தினத்தன்று மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி வரும் 05.06.24, புதன்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி நாமக்கல் டிரினிட்டி இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!