Namakkal

News May 30, 2024

நாமக்கல் கறிக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

image

நாமக்கல் மாவட்ட கோழி கறி விற்பனை சில்லறை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ. 260 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள், தமிழகத்தில் கடந்த மாதம் வீசிய வெப்ப அலை காரணமாக கறிக்கோழிகள் உயிரிழந்து விட்டது.
இதனால் கறிக்கோழி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே விலை உயர்ந்துள்ளது.

News May 30, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் எலுமிச்சை 100க்கு விற்பனை

image

நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே சில பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது.இதனைத் தொடர்ந்து இன்று 30ஆம் தேதி நாமக்கல் நகரில் வெயில் வாட்டி வைத்தது கடந்த சில நாட்களாகவே நாமக்கலில் இந்த நிலை தொடர்கிறது.இதன் காரணமாக எலுமிச்சை சாறு பருக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன் தேவை அதிகரித்துள்ளது.நாமக்கல்லில் உழவர் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News May 30, 2024

நாமக்கல்:கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்

image

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை நேற்று துவங்கியது. இக்கல்லூரியில் மொத்தம் உள்ள, 13 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கைக்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,757 மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

News May 30, 2024

நாமக்கல் அருகே அதிகரிக்கும் இளநீர் விற்பனை

image

பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக இளநீர் விற்பனை சரிவடைந்தது. இந்நிலையில் இந்த வாரம் தொடக்கம் முதலே படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் இளநீர் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இதனால் இளநீர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 29, 2024

ரேசன் அரிசி பயன்படுத்த தடை

image

நாமக்கலில் ரேஷன் அரிசியை கோழிப் பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 5 மாதங்களில் 3 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.இதை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகள், ரேஷன் அரிசியை மாட்டுத் தீவனமாக அரைத்து வழங்கும் மாவு மில் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்தனர்.

News May 29, 2024

அரசு ஜ.டி.ஜ விண்ணப்பங்கள் வரவேற்பு

image

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில், 2 ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் (இருபாலர்) பயிற்சிகளில் சேர www.skilltraining.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நாமக்கல் அரசு ஐ.டி.ஐ கொல்லிமலை அரசு ஐ.டி.ஐக்கு நேரில் வந்தும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் வரும் ஜூன் 7 ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

கொல்லிமலை அரசு ஐ.டி.ஐயில் விண்ணப்பங்கள் வரவேற்பு

image

நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ. நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொல்லிமலை நாமக்கல் ஆகிய ஐடிஐக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. படிக்கும் போதும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு 5,757 பேர் விண்ணப்பம்!

image

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை துவங்கி உள்ளது. இக்கல்லூரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கைக்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,757 மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

News May 29, 2024

முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகளுக்கு சேர்க்கை

image

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவா் சேர்க்கைக்காக, முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்சிசி மாணவா்கள் உள்பட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் வியாழக்கிழமை (மே 30) காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

நாமக்கல்: கடை உரிமையாளர்கள் மனு வழங்கல்

image

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அவர்களிடம், இன்று நாமக்கல் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் அசோசியன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில், சட்டவிரோதமாக சிம்கார்டுகளை ஒரு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!