India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொல்லிமலையில் பணியாற்றி வந்த 4 போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் உள்ள செம்மேடு செங்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த அண்ணா, ஜெகதீசன்,சரவணன்,ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் இவர்கள் நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

உலக ரத்த கொடையாளா் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி முகாமை தொடங்கிவைத்து ரத்த தானம் செய்தாா். மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் ரத்த தானம் குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். முகாமில் 50 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி , ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் தொடா்புடைய கூட்டுறவு வங்கிகளில் பெற்று அதைப் பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 15.06.2024-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு  இன்று இரத்த தான முகாம் கேஎஸ்ஆர் பல் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்டது.
முகாமை  ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ் கண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் மருத்துவர் சரத் அசோகன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். KSR பல் மருத்துவகல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் 2,43,708 பசுக்கள், 54,692 எருமைகள் என மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு நூறு சதவீதம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என ஆட்சியர் உமா தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிராமங்களில் பண்ணைக் கழிவுகளை எரியூட்டும் மறுசுழற்சி செய்து மக்கும் உரமாக்குதல் பற்றிய, ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியில் நிலையத்தை நேரிலோ 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை கொள்ளலாம்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.138-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து, நேற்று ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.45 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து கடுமையாக குறைந்து விட்டதால், ஒரு கிலோவுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.