India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க, மத்திய தொழிலாளர் நலன் அமைச்சர் ஷோபா கரந்தலஜே இன்று(ஜூன் 17) நாமக்கல் வருகிறார். பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 ஆவது முறையாக உதவித் தொகைக்கான நிதி விடுவிக்கும் திட்டம், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் இன்று திங்கட்கிழமை (17.06.2024) முகாம் அலுவலகத்தில் நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது புத்தகம் ஒன்றையும் நினைவு பரிசாக வழங்கினார். சந்திப்பின் போது பலர் உடன் இருந்தனர் தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி குறித்து பேசினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு கொமதேக ஆதரவளித்து உள்ளது. எனவே அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கொமதேக பணியாற்றும் என கூறியுள்ளார்.

நாமக்கல் அருகே வேட்டம்பாடி பகுதியில் கனரக வானங்கள் சாலை ஓரத்தில் நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து துறையினருக்கு மனு அளித்ததின் பேரில் அப்பகுதி வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது விதிகள் மீறி வந்த சுமார் 60 வாகனங்களுக்கு ரூ 3 லட்சம் அபராதம் விதித்தனர்.

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர். நேற்று வார இறுதி நாள் என்பதால் நாமக்கல் உழவர் சந்தையில் சுமார் ரூ.10.89 லட்சத்திற்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது .விவசாயிகள் சுமார் 25 டன் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். காய்கறிகள் அதிகம் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது, மதுரை-பெங்களூரு புதிய வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அனுப்பி உள்ளார்.

பள்ளிபாளையம் தனியார் நூற்பாலை  உரிமையாளர் ஜெகநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான பெருமாள் என்பவர் நேற்று நாமக்கல்லில் சுற்றி திரிந்துள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர் .
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.138-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில், 8 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேற்று(ஜூன் 15) நடைபெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா்க்கும் முகாமில் 95 மனுக்கள் அளிக்கப்பட்டன. இம்முகாமில் மொத்தமாக முகவரி மாற்றம், புதிய பெயா் சோ்த்தல், நீக்கல் கோரி 31 மனுக்களும், கைப்பேசி எண் மாற்றம் கோரி 38 மனுக்களும், குடும்பத் தலைவா் பெயா் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் கோரி 26 மனுக்களும் என மொத்தமாக 95 மனுக்கள் வரப்பெற்றன.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது இதனை நேரில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.