India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல் வயல்களில், ஏரி தண்ணீருடன், நாமக்கல் நகராட்சியிலிருந்து வரும் கழிவு நீர் துாசூர் ஏரியில் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்து, எட்டு இடங்களில் நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். நெல் வயல்களில் ஏரி தண்ணீருடன், நகராட்சி கழிவு நீரும் கலந்ததால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது.

சிறு, குறு &நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரியை 20 % குறைக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜேவிடம் நாமக்கல்லில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.நாடு முழுவதும் 9.26 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுதோறும் ரூ. 6,000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், 17-வது நிதி விடுவிப்பு நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் தொடக்கிவைத்தார் பிரதமர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்திக் கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு செய்பவர்கள் மீது இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.

இந்திய பிரதமர் பி எம் கிஷான் 17வது தவணைத் தொகையினை விடுவித்தார்.நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் காணொளி மூலம் நிகழ்ச்சியைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்புத்துறை மற்றும் சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சோபா கரந்தலஜே இன்று பங்கேற்று விவசாயிகளுடன் காணொளியை பார்வையிட்டார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெற ஏதுவாக 3 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கலந்து கொண்டு 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் மே 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொது விநியோகத் திட்ட பொருட்களை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கான ஒதுக்கீட்டினை நடப்பாண்டு ஜூன்-2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நாட்டின் விவசாயிகளுக்கு பி.எம் கிஷன் தொகையினை இன்று விடுவிப்பதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மத்திய தொழிலாளா் நலன்,வேலைவாய்ப்புத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேயை, நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் M.ராஜேஷ்குமார் பொன்னடை போர்த்தி வரவேற்றார்.

நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன்-19) மாதாந்திர பணிகள் நடைபெறும் காரணத்தால், நாளை (ஜூன்-19) காலை நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மற்றும் பெரியப்பட்டி கொண்டி, செட்டிபட்டி, முதலைப்பட்டி ஆகிய சுற்று வட்டார பகுதியில் நாளை (ஜூன்-19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்கள், இன்று(ஜூன் 18) ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் துறை சார்ந்த அதிகாரியிடம் மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.