Namakkal

News June 23, 2024

நாமக்கல்லில் புதிய ரேசன் கடை திறப்பு

image

 மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் இன்று (ஜூன் 23) நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகக் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News June 23, 2024

நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நாளை(ஜூன் 24) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

20 நாட்களில் மாநகராட்சியாக மாறவிருக்கும் நாமக்கல்

image

 அடுத்த 20 நாட்களில் தமிழகத்தில் 4-புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N நேரு நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் நாமக்கல் நகராட்சி உட்பட நான்கு நகராட்சி இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பானது மக்கள் நலத்திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்.

News June 23, 2024

போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விவரத்தை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாக (அ) அலுவலகத்தை நேரிலோ அனுகி பதிவு செய்யலாம்.

News June 23, 2024

வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல மனு

image

மதுரை – பெங்களூர் இடையேயான வந்தேபாரத் இரயில் நாமக்கல் இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுவை ரயில் உபயோகிப்பாளர்களின் நாமக்கல் மாவட்ட சங்கத் தலைவர் சுப்பிரமணி நாமக்கல்லில் நேற்று மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பரிசீலிப்பதாக கூறினார்.

News June 22, 2024

வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல மனு

image

மதுரை – பெங்களூர் இடையேயான வந்தேபாரத் இரயில் நாமக்கல் இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுவை ரயில் உபயோகிப்பாளர்களின் நாமக்கல் மாவட்ட சங்கத் தலைவர் சுப்பிரமணி நாமக்கல்லில் இன்று மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பரிசீலிப்பதாக கூறினார்.

News June 22, 2024

நாமக்கல்லில் மத்திய அமைச்சருடன் புகைப்படம்

image

2வது முறையாக தகவல் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்திற்கு முதல் முறையாக முருகன் இன்று வருகை புரிந்தார். நாமக்கல்லில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து நாமக்கல் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் அவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News June 22, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எல் முருகன் தரிசனம்

image

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவர் இரண்டாவது முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

News June 22, 2024

அரசு மகளிர்‌ கல்லூரியில் வரும் 24ல் கலந்தாய்வு

image

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம். கோவிந்தராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் மாணவியா் சோ்க்கையின் சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி நடைபெற்றது.

News June 22, 2024

நாமக்கல்லில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் மழை லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. பகல் வெப்பம் 95, இரவு வெப்பம் 71.6 டிகிரி அளவில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!