India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் கூட்டலில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3-வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா தலைமையில் நடந்தது. இதில் கே.ஆர் என் ராஜேஸ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சென்ன கிருஷ்ணன் ஆவடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனுடன் கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றி வந்த மகேஸ்வரி நாமக்கல் மாநகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி விரைவில் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக பதவி ஏற்க உள்ளார் என கூறப்படுகிறது. இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நாமக்கல் சொந்தங்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 539964 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நாமக்கல்லில் புதியதாக சித்த மருத்துவமனை 60 படுக்கை வசதிகளுடன் செயல்படும்’ என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், எம்.பி., ராஜேஸ்குமார், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சித்த மருத்துவமனை பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். அவர்கள் வயநாட்டில் கனமழை பெய்ததால் அங்கு நிகழ்ந்த நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த மூன்று பேரின் சடலங்களையும் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் மூன்று பேரை தேடும் பணியில் பேரிடர் குழு தீவிரம் காட்டி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்றும், நாளையும் 4 மி.மீ மழையும், அடுத்த 2 நாட்கள் 5 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை முதல் கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து அணிந்து நாமக்கல் இருந்து கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில், செம்மேடு பகுதிகளுக்கு சென்று விட்டு மீண்டும் நாமக்கல் வரும். இதேபோல் காரவள்ளி கொல்லிமலை அடிவார கோவிலில் இருந்து கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆக.2,3 தேதிகளில் வல்வில் ஒரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஒரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி கொண்டாடப்படுகிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை சனிக்கிழமை காலை சங்ககிரியில், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் கூற உள்ளார். முன்னேற்பாடு பணிகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.