India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல்லில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல்லில் 5செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.

திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோவிலில் இன்று காலை விசேஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்தார். கோவில் தர்மகர்த்தா முத்துக்குமார், சாந்தி முத்துக்குமார் மற்றும் ராயல் ஃபுட்ஸ் சக்திவேல் அவர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 01.07.23 முதல் 30.06.24 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவ செலவு தொகை மீள பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் கூடிய பட்டியல்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் இறுதி நாளாக இந்த மாதம் 16ம் தேதி என்று நாமக்கல் மாவட்டஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் ஒரு கோடியே 50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சென்ற வாரம் மாட்டுச் சந்தையில் ஒரு கோடியே 80 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. கேரளா மாநிலத்திலிருந்து அதிகளவு வியாபாரிகள் வராத காரணத்தால் வர்த்தகம் குறைவு.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்று 8 மி.மீ.யும், நாளை (வியாழக்கிழமை) 14 மி.மீ. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 2 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: கோழி வளர்ப்பில், நாமக்கல் மண்டலம் சிறப்பு பெற்றது. கால்நடை மருத்துவ கல்லுாரியில், கோழி நோய் கண்டறிதல் ஆய்வகம் உள்ளது. இருப்பினும், பெரியளவில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களால், பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. அதனால், சர்வதேச அளவில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆய்வகத்தை மேம்படுத்த, ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பேசினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 6ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் படி மங்களபுரம் 3 மிமீ, நாமக்கல் 3 மிமீ, பரமத்திவேலூர் 1மிமீ, புதுச்சத்திரம் 3.00 மிமீ, ராசிபுரம் 39 மிமீ, சேந்தமங்கலம் 4மிமீ, திருச்செங்கோடு 13 மிமீ, ஆட்சியர் வளாகம் 2 மிமீ, கொல்லிமலை செம்மேடு 3 மிமீ என மாவட்டத்தில் அதிகபட்சமாக ராசிபுரத்தில் 39 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நாட்டின கோழி வளர்ப்பு தொழிலை பெண்கள் மேற்கொள்ள 24-25ம் ஆண்டில் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாமக்கலில், ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,500 பயனாளிகளுக்கு செயல்படுத்த நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20க்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.