Namakkal

News August 14, 2024

நாமக்கல்லல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 6 மி.மீ., நாளை (வியாழன்) 28 மி.மீ, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 29 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரி ஆகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரி ஆகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 14, 2024

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் 12 கிராமங்கள்

image

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். அதன்படி, நாமக்கல் நகரையொட்டி உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாய்க்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 14, 2024

நாமக்கல்: இன்றைய காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: கத்தரி ரூ.50, தக்காளி ரூ.20, வெண்டை ரூ.24, அவரை ரூ.80, கொத்தவரை ரூ.32, முருங்கை ரூ.60, முள்ளங்கி ரூ.36, பாகல் ரூ.60, பீர்க்கன் ரூ.45, வாழைக்காய் ரூ.28, வாழைப் பூ ரூ.10, வாழைத்தண்டு ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நேற்று 1 கிலோ எலுமிச்சை ரூ.75க்கு விற்பனை செய்யப்பட நிலையில், இன்று ரூ.5 குறைந்து ரூ,70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News August 14, 2024

நல்லாசிரியர் விருது: 24 பேரிடம் நேர்காணல்

image

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 ஆசிரியர்களிடம் நேற்று நாமக்கல்லில் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, உயர்நிலை, தனியார் பள்ளிகள்), தலைமை ஆசிரியர்கள் இருவர் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் அடங்கிய குழு, முதன்மை கல்வி அலுவலர் அறையில் தனித்தனியாக ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

News August 13, 2024

நாமக்கல் இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ஆகஸ்ட் 16 தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடைபெறுகிறது.
➤ நாமக்கல்லில் முட்டை விலை 10காசு உயர்வடைந்து ரூ.4.50 காசாக நிர்ணயிக்கப்பட்டது.
➤நாமக்கல் மாவட்டத்தில் 32 மிமீ மழை பதிவு
➤திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது.
➤பரமத்தி பேரூராட்சி அலுவலகத்தில் 20 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

News August 13, 2024

நாமக்கல் கோழிப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு 

image

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் தலைமையில், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் அல்கா உபத்தியாயா முன்னிலையில், இன்று நாமக்கல் பழையபாளையம் தனியார் கோழி பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்வின்போது கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் அபிஜித்மித்ரா, இணைச் செயலாளர் சவுத்ரி, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கால்நடை இயக்குனர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News August 13, 2024

BREAKING நாமக்கல்: முக்கிய பிரமுகர் கைது

image

நாமக்கல்லில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமியை இன்று குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 13, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 32 மிமீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை விவரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மோகனூர் 13 மிமீ, நாமக்கல் 2 மிமீ, புதுச்சத்திரம் 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 1மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 12 மிமீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 32 மிமீ மழை பதிவாகி உள்ளது.

News August 13, 2024

நாமக்கல்: மீன் உணவு தயாரிக்க இலவச பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ‘மீன்களுக்கான மீன் உணவு தயாரிக்கும் முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள தொடர்ப்புக்கு 04286 266345, 266650 மற்றும் 7358594841 என்ற எண்களை அணுகலாம் என வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 13, 2024

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக அதிகரித்துள்ளது. மேலும், கறிக்கோழி கிலோ ரூ.85க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.5 உயர்வடைந்து ரூ.90 ஆக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!