India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

நாமக்கல்லில் நாளை(அக்.8) அதிகாலை மற்றும் மாலைவேளைகளில் சென்னை, அரக்கோணம், காட்பாடியில் இருந்து நாமக்கல் வருவதற்கும், நாமக்கலில் இருந்து காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும், இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி செல்லவும் சிறப்பு ரயில்கள் உள்ளன. நாமக்கல் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

நாமக்கல் மக்களே.., எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு, ஆம்னி பஸ்களில் அதீத டிக்கெட் தொகை, மோசடி போன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க அரசு சார்பாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-24749002, 044-26280445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் நேற்று(அக்.6) முதல் அக்.31ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு 3 tier AC பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த, 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை(அக்.8) இரவு 07:45க்கு செல்லும். பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.

நாமக்கல் மக்களே.., வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி தொடர விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கு ரூ.15 லட்சம் வரை தமிழக அரசு சார்பாக கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் அரிய <

நாமக்கல்: திருச்செங்கோடு துணை மின் நிலையத்தில் இன்று(அக்.7) மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், கருவேப்பம் பட்டி, ஆத்தூராம் பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, செங்கொண்டாம்பாளையம் சிந்தம்பாளையம், கைலாசம்பாளையம் ஆக்ய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் நாளை (அக்.8) மாலை 5 மணிக்கு திருச்செங்கோடு தொகுதியிலும், 6.30 மணிக்கு குமாரபாளையம் தொகுதியிலும், நாளை மறுநாள் (அக்.8) மாலை 5 மணிக்கு நாமக்கல் தொகுதியிலும், மாலை 6.30 மணிக்கு ப.வேலூர் தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்.12ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வு நடக்கிறது. மொத்தம், 30 தேர்வு மையங்களில், 8,193 தேர்வர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நாளான வரும் அக்.12 காலை 8:30 முதல் 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கபடுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: திருச்செங்கோடு பகுதியில் மது போதையில் வந்து இரு சக்கர வாகனத்தில் கீழே விழுந்த ஆசாமியை தூக்கி விட முயற்சித்த போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்திய விட்டம்பாளையம் பகுதியில் பந்தல் போடும் வேலை செய்யும் ஹரிஹரன் என்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து ஹரிஹரன் சிறையிலடைக்கப்பட்டார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 7) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.