India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் நீரை தமிழக அரசு தடுத்து ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். காவேரி சரபங்கா ஆறுகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வராஜ் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பிஆர்ஓ சுமன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், 100 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இதில் நாமக்கல் பள்ளி மாணவன் ரஜனீஷ் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும், அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,630 MBBS இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 மாணவர்கள் இந்தாண்டில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.96 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.92 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய், கனி, பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.44, தக்காளி ரூ.25, வெண்டை ரூ.25, அவரை ரூ.75, கொத்தவரை ரூ.24, முருங்கை ரூ.50, முள்ளங்கி ரூ.32, புடல் ரூ.20, பாகல் ரூ.55, பீர்க்கன் ரூ.40, வாழைக்காய் ரூ.28, வாழைப் பூ ரூ.10. நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.10 உயர்ந்து கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்: ராசிபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் 2 நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (60) என்பவருக்கும், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கைரூல் ஆஸ்மி (35) என்பவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் அடித்துக் கொண்டதில், தங்கராஜ தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

➤நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் எண்ணை வித்து பயிர் பாதுகாப்பு குறித்து இலவச பயிற்சி
➤நாமக்கல்லில் ஆபாச செயலி மூலம் மாணவரிடம் பணம் பறிப்பு
➤நாமக்கல்லில் விதிமுறை மீறி இயக்கிய 3 வாகனங்கள் பறிமுதல்
➤எருமப்பட்டியில் மானிய விலையில் விதைகள் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்
➤சேந்தமங்கலம் சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை
➤மோகனூரில் சத்தியநாராயண பூஜை

வேளாண்துறையின் மூலம் மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க தமிழகஅரசு சிறப்பு திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எருமப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான வீரிய மக்காச்சோளம் விதை, இயற்கை உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் எருமப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நல்லிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தகுதி சான்றிதழ் புதுப்பிக்காத வாகனங்கள், அளவுக்கு அதிகமாக சரக்கு ஏற்றிய வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களை ரூ.67,000 அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செங்கோடு அடுத்த கீழேரிப்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் முனுசாமி (51). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் இருந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முனுசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.