Namakkal

News August 20, 2024

நாமக்கல்: 102வது நாளாக தொடரும் போராட்டம்

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வலையப்பட்டி, எண்புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட சில பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 102வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை சிப்காட் எதிர்ப்பாளர்கள் நடத்தினர். இதில் விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News August 20, 2024

நாமக்கல்: அரசுப்பள்ளி ஆசிரியர்‌ மீது பரபரப்பு புகார்‌

image

திருச்செங்கோடு அடுத்த விட்டம்பாளையத்தில்‌ அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, வேதியியல்‌ ஆசிரியராக பணியாற்றி வருபவர்‌ வேலுச்சாமி என்பவர் மாணவர்களிடம்‌ சில்மிஷங்களில்‌ ஈடுபடுவதாக பிளஸ்‌ 2 மாணவர்கள்‌, தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தனர்‌. இதையடுத்த்து மாவட்ட கல்வி அலுவலர்‌, குழந்தைகள்‌ பாதுகாப்பு குழு உறுப்பினர்‌ ஆகியோர்‌ தலைமையில்‌ மற்றும் மாணவர்‌களிடம்‌ விசாரணை நடத்தினர்.

News August 19, 2024

நாமக்கல் இன்றைய தலைப்புச்செய்திகள்

image

➤நாமக்கல்லில் எலுமிச்சை பழம் விலை உயர்வு
➤நாமக்கல்லில் குறை தீர்க்கும் முகாமில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனு
➤நாமக்கல்லில் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
➤நாமக்கல்லில் ஆவணி அவிட்டம் கோலாகலம்
➤நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ 4.60 விற்பனையானது.
➤நாமக்கல் வீராங்கனை மோக்ஷிதா பேட்மிட்டன் போட்டியில் முதலிடம்

News August 19, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர் பொருளாதார முன்னேற்றம் பெறும் விதமாக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் அலுவலரிடம் விவரம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் நீரை தமிழக அரசு தடுத்து ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். காவேரி சரபங்கா ஆறுகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வராஜ் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

News August 19, 2024

குறை தீர்க்கும் முகாமில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பிஆர்ஓ சுமன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், 100 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

நாமக்கல் மாணவர் முதலிடம்!

image

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இதில் நாமக்கல் பள்ளி மாணவன் ரஜனீஷ் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும், அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,630 MBBS இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 மாணவர்கள் இந்தாண்டில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார்.

News August 19, 2024

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.96 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.92 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News August 19, 2024

நாமக்கல்லில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய், கனி, பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.44, தக்காளி ரூ.25, வெண்டை ரூ.25, அவரை ரூ.75, கொத்தவரை ரூ.24, முருங்கை ரூ.50, முள்ளங்கி ரூ.32, புடல் ரூ.20, பாகல் ரூ.55, பீர்க்கன் ரூ.40, வாழைக்காய் ரூ.28, வாழைப் பூ ரூ.10. நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.10 உயர்ந்து கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News August 19, 2024

நாமக்கல்: மனநல காப்பகத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

நாமக்கல்: ராசிபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் 2 நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (60) என்பவருக்கும், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கைரூல் ஆஸ்மி (35) என்பவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் அடித்துக் கொண்டதில், தங்கராஜ தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!