Namakkal

News August 21, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 61.20 மிமீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் 21ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு விபரம் மங்களபுரம் 35 மிமீ, ராசிபுரம் 3.20 மிமீ, சேந்தமங்கலம் 1மிமீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 3 மிமீ, கொல்லிமலை செம்மேடு 19 மிமீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 61.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 21, 2024

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்

image

நாமக்கல் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்றது முதல் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், உடனடியாக அவற்றை நிறைவேற்றக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவரவேண்டும் என்பதே முக்கியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 21, 2024

மத்திய கூட்டுறவு வங்கி 3வது நிர்வாக குழு கூட்டம்

image

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் மூன்றாவது நிர்வாக குழு கூட்டம், மத்திய கூட்டுறவு வங்கியின் வட்டார அலுவலகத்தில் நேற்று எம்பி ராஜேஷ்குமார்
தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ப.அருளரசு முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மண்டல துணை பதிவாளர் ஜேசுதாஸ், திருச்செங்கோடு துணை பதிவாளர் நாகராஜன் மற்றும் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

News August 21, 2024

கல்லூரி மாணவி மர்ம மரணம் 

image

நாமக்கலில் கல்லூரி மாணவி பானுப்பிரியா மர்ம முறையில் வீட்டில் நேற்று இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க காலணியில் வாடகைக்க வீடு எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், அப்பெண் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

News August 21, 2024

நாமக்கல்லில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

நாமக்கல்லில் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. நாமக்கல் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 116 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரம்<<>>

News August 20, 2024

நாமக்கல் இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤நாமக்கல்லில் முட்டை விலை 10 காசு குறைந்து ஒரு முட்டை விலை ரூ4.50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
➤மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்
➤மல்லூர் பகுதியில் நாளை மின் தடை
➤நாமக்கல் மாவட்டத்தில் ஒண்டிவீரன் மற்றும் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News August 20, 2024

நாமக்கல்லில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல்லில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக செல்லும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. தங்கள் பகுதிகளில் மழை பெய்தால் COMMENT செய்யுங்கள்.

News August 20, 2024

நாமக்கல்லில் ரூ.2.50 லட்சம் பரிசு: அழைப்பு 

image

நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு பயிருக்கும் முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2ஆம் பரிசு ரூ.1.50 லட்சம், 3ஆம் பரிசு ரூ.1 லட்சம் (ம) சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

News August 20, 2024

நாமக்கல்லில் கறிக்கோழி ரூ.2 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே, கறிக்கோழி விலை கிலோ ரூ.98ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.92 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News August 20, 2024

நாமக்கல்லில் பாகற்காய் விலை குறைந்தது

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கனி, பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.48, தக்காளி ரூ.25, வெண்டை ரூ.25, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.50, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.48, பீர்க்கன் ரூ.40, வாழைக்காய் ரூ.28, வாழைப் பூ ரூ.10, வாழைத்தண்டு ரூ.15, பரங்கிகாய் ரூ.25. இதனிடையே நேற்று 1 கிலோ பாகற்காய் ரூ.55க்கு விற்ற நிலையில் இன்று ரூ.48க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

error: Content is protected !!