India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ் (16), ரித்திஷ்(16)) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் படுகாயமடைந்து. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விடுபட்டுள்ள வாக்காளர்கள் மற்றும் 17 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் பூக்களை இங்கே ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் குண்டுமல்லி ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையானது இதேபோல் முல்லை ரூ450, ஜாதி மல்லி ரூ320, காக்கட்டான் ரூ200 கலர்காக்கட்டான் ரூ200 மலைக்காக்கட்டான்ரூ200. தொடர்ந்து திருமண மூர்த்த நாள் வரும் காரணத்தால் விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். கபடி, சிலம்பம், நீச்சல், கேரம், சதுரங்கம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளுக்கு https://sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25/08/24.

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள வார சந்தையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்ற வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் கடைகள் வைக்க கூடாது. இரவு நேரத்தில் வார சந்தை அனுமதியின்றி உள்ளே இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது போன்ற அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய் கனி பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.48, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.24, அவரை ரூ.70, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.50, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.48, பீர்க்கன் ரூ.38. இதனிடையே நேற்று 22ஆம் தேதி ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 23ஆம் தேதி ரூ 8 விலை உயர்ந்து ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை, அறிவியல் கல்லூரி, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம்சோன் நிறுவனம் ஆகியவை இணைந்து கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தியது. இதில் மொத்தம் 27 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் நாமக்கல் எக்ஸல் வணிகவியல், அறிவியல் கல்லூரி மாணவர் எம்.தௌபிக், ‘மிஸ்டர் கைத்தறி மகாராஜா’ என்ற பட்டத்தை வென்றார், அவருக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

➤நாமக்கல் அருகே கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் 3லட்சம் நிதி
➤7 மாதங்களுக்கு பிறகு ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்துக்கு பரிசல் போக்குவரத்து
➤நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்
➤நாமக்கல்லில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படகுசவாரி
➤நாமக்கல் கடந்த மூன்று ஆண்டுகளில் 5,517 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு
➤நாமக்கல் மாவட்டத்தில் நாளை தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற பெறுகிறது.

நாமக்கல், திருசெங்கோடு அருகே சக்திநாயக்கன்பாளையத்தில் கடந்த 27 ஆம் தேதி சிறுமி தஸ்மிதா, செந்தில்குமாரால் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். அந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 3லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத வியாழக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பாக தங்க கவசம் சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளாமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
Sorry, no posts matched your criteria.