Namakkal

News October 6, 2024

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (06-10-2024) நிலவரப்படி கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ. 104க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும், முட்டை விலையை பொறுத்தவரையில் ஒரு முட்டை ரூ.5.05 காசுகளாக நீடித்து வருகிறது. புரட்டாசி மாதம் தொடக்கம் முதலே விலைகளில் மாற்றம் எதுவும் இன்றி நீடித்து வருகிறது.

News October 6, 2024

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரில் இயற்கை முறையில் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023 – 24 ம் ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ1,00,000, 2ம் பரிசு ரூ60,000, 3ம் பரிசு ரூ40,000 வழங்கப்பட உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்

News October 5, 2024

சட்ட விரோதமாக தங்கியிருந்த மூவர் கைது..!

image

நாமக்கல் அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்கு மட்டும் முறையான பாஸ்போர்ட் இருந்ததால், மற்ற 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “சேந்தமங்கலம் சாலையில் விசாணம் என்ற பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

News October 5, 2024

விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கல் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் மண்பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். முகாம் நடைபெறும் கிராமம் – அக்.9 நாமக்கல் – திண்டமங்கலம், அக். 16 எருமப்பட்டி- கோனாங்கிப்பட்டி, அக். 23 பரமத்தி-அா்த்தனாரிபாளையம், அக்.30 ராசிபுரம்-காக்காவேரி. விவசாயிகள் மண் மாதிரிகள், நீா் மாதிரிகளை நேரடியாக வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெறலாம் என குறிப்பிட்டார் ‌.

News October 5, 2024

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம். எருமப்பட்டி 40 மி.மீ, குமாரபாளையம் 1.20 மி.மீ, மங்களபுரம் 20.80 மி.மீ, மோகனூர் 31 மி.மீ, பரமத்திவேலூர் 65.50 மி.மீ, புதுச்சத்திரம் 17 மி.மீ, ராசிபுரம் 10 மி.மீ, சேந்தமங்கலம் 97 மி.மீ, திருச்செங்கோடு 74 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 34 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 84 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 562.50 மிமீ மழை பதிவாகி உள்ளது.

News October 4, 2024

நாமக்கல்லில் வன உயிரின வார விழா

image

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வனத்துறையால் வன உயிரின வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் (05.10.2024 மற்றும் 06.10.2024) நாமக்கல் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவையொட்டி ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

வீரர் வீராங்கனைகளை வழியனுப்பி வைத்த ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள நாமக்கல் மாவட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளை, வழியனுப்பி வைத்தார். இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்

News October 3, 2024

புதிய பேருந்து நிலைய கடைகள் நாளை பொது ஏலம்

image

நாமக்கல் முதலைப்பட்டிபுதூனர் புதிய பேருந்து நிலையம் வியாபார கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.4) பொது ஏலத்தில் விடப்படுகின்றன. பொது ஏலம் வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணி வரையில் ஒப்பந்தப்புள்ளி கோரலாம். இந்த ஏலம், நாமக்கல் மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கடைகள், இதர இனங்களை ஏலம் எடுக்க விண்ணப்பித்துள்ளோா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 3, 2024

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

நாமக்கல், குமாரபாளையம் தட்டாங்குட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். பெங்களுருவில்இருந்து பழனி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரியை முந்த முயன்ற போது கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் வீர பரதீப் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

News October 3, 2024

நாமக்கலில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (03-10-2024) நிலவரப்படி கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ. 104-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும் முட்டை விலையை பொறுத்தவரையில் ஒரு முட்டை 505 காசுகளாக நீடித்து வருகிறது. புரட்டாசி எதிரொலியாக விலைகளில் எதுவும் மாற்றம் இன்றி நீடித்து வருகின்றனர்.