India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் 1.05.2025 நாளை மே தினத்தையொட்டி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி, விற்பனை செய்தாலோ, திறந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (29/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் நிலைய எண்கள். நாமக்கல்-04286-231901, மோகனூர்-04286-255291, திருச்செங்கோடு-04288-252309, ராசிபுரம்-04287-222839, குமாரபாளையம்-04288-260100, வேலூர்-04268-220228, வளவந்திநாடு-04286-247428. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை சார்ந்த கோரிக்கை மற்றும் புகாரை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று (29.4.2025) மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தன்று (மே.1) காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதில் கிராம நிர்வாகம் மற்றும் பொதுசெலவினம் குறித்து விவாதிக்கப்படும். இணையவழி மனைப்பிரிவு பட்டா மற்றும் கட்டட அனுமதி வழக்குதல்,வரி மற்றும் வரியில்லா வரியினங்களை இணையவழி செலுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே, காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். நாமக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
நாமக்கல்: பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட இருந்த போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த பள்ளி காலனியை சேர்ந்த அஜய் பிரபாகர் (26), லோகேஸ்வரன் (32), குணசேகரன் (48), கிருபாகரன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குணசேகரன் கத்தியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப் 28) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.