India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(மார்ச்.18) மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வங்கி ஊழியர்களிடம் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசும்போது, வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் பணம் பரிமாற்றம் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
நாமக்கல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தனராசு பதவி உயர்வு பெற்று ஏடிஎஸ்பி ஆக நாமக்கல் மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எஸ். ஆனந்தராஜ் நாமக்கல் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல்லில் 1946 முதல் இதுவரை 59 பேர் டிஎஸ்பியாக பணியாற்றிய வந்தனர். இந்நிலையில் 60 வது டிஎஸ்பியாக ஆனந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. நேற்று திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி, சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனிடையே நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய இரண்டுக்கும் 5, 58, 400 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மணாகம் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து திருச்செங்கோடு பகுதியில் நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளை பராமரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி தோறும் திங்கட்கிழமை என்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் ஏற்கனவே தங்கள் சுய பாதுகாப்பிற்காக தக்க உரிமம் பெற்று வைத்துள்ள அனைத்துவிதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத கிடங்கு மற்றும் காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியர் அறிக்கை இன்று வெளியிட்டார்.
பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் சங்ககிரி இராசிபுரம் சேந்தமங்கலம் நாமக்கல் பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இவற்றில் 7,04,270 ஆண்கள் 7,39,610 பெண்கள் மற்றும் 156 இதர பிரிவினர் ஆக மொத்தம் 14,44,036 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 1660 வாக்குச் சாவடிகள் உள்ளன என தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தெரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழிகாட்டு நெறிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் மூலம் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.