Namakkal

News September 9, 2024

நாமக்கல்: ஆபரண தங்கம் ரூ 53,440க்கு விற்பனை

image

நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று 9ஆம் தேதி திங்கட்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: ஆபரண தங்கம் 8 கிராம் ரூ.53,440, 1 கிராம் ரூ.6,680, முத்திரைக் காசு 8 கிராம் ரூ.54,440, 1 கிராம் ரூ.6,800, வெள்ளி ஒரு கிராம் ரூ.90 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

News September 9, 2024

நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக ஆகாஷ் ஜோஷி இன்று பொறுப்பேற்றார் . அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல் நிலையம் வாரியாக உள்ள குற்ற வழக்குகள் மற்றும் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

News September 9, 2024

நாமக்கல்: பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

நாமக்கல்: பெரிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் காளிமுத்து – சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் நேற்று இரவு அந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 9, 2024

நாமக்கல்லில் காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய் கனி பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.48, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.18, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.35, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.18, பாகல் ரூ.38, பீர்க்கன் ரூ.38 மற்றும் வாழைக்காய் ரூ.30. இதனிடையே நேற்று ஒரு கிலோ கேரட் ரூ.88க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று ரூ.10 விலை உயர்ந்து ரூ.98க்கு விற்பனை செய்யப்பட்டது.

News September 9, 2024

மின்னணு பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருட்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருள்களை, ஏ.டி. எம்., கார்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம், அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., கார்டு அல்லது கூகுள் பே, போன் பே மூலம் செலுத்தி, வேளாண் இடுபொருள்களை பெற்று பயன்பெறலாம்.

News September 9, 2024

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் சுமார் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினர். இதனடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற மண்டலங்களின் முட்டை விலை தொடர்ந்து உயர்வதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

அர்த்தநாரீசுவரர் கோயிலில் ஓட்டுநர் வேலை

image

திருச்செங்கோடு பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இக்கோவிலில், 4 ஓட்டுநர் பணியிடங்கள் நிலுவையில் உள்ளன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், முதலுதவி சான்றிதழ், ஓட்டுநர் அனுபவ சான்றிதழ் மற்றும் நல்ல உடல் தகுதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

நாமக்கல் உதவி ஆணையர் திடீர் மரணம்

image

நாமக்கல் உதவி ஆணையராக (கலால்) பணிபுரிந்து வந்த புகழேந்தி என்பவருக்கு கடந்த புதன்கிழமை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சொந்த ஊரான திருச்சிக்கு சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகவும் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.

News September 9, 2024

நாமக்கல்: 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல்: மோகனூர் சாலையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நாளை செப்.10 காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படுகிறது. ஓட்டுநருக்கான தகுதிகளாக, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 24 வயதுக்கு மேலாகவும் 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். விவரங்களுக்கு, 044-28888060, 75, 77, 91542-50563 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

News September 8, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் நாமக்கல் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் குடிபோதையில் விநாயகர் சிலைகளை எடுத்து செல்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!