India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை காலை மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக மேலும் இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இதில் மொத்தமாக 17 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ15000 – 40000 வரை கொடுக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் BSMS, D.Pharm, Diploma, Literate, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://namakkal.nic.in/notice_category/recruitment/ இந்த இணைய தளத்தை அணுகலாம்.

ராசிபுரம், மங்களபுரம் அருகே அமைந்துள்ள ஒண்டிக்கடை பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுமார் ஐந்து பேரை கடித்தது. இதில் காயமடைந்தவர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல் பெயர் திருத்தம், புதியகுடும்ப அட்டை கோருதல், கைபேசிஎண் பதிவு உள்ளிட்டவைகள் மேற்கொள்ள பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்நாள் முகாம் வரும் செப்14ம் தேதி நாமக்கல் ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சவுரிபாளையம் மாதா கோயில் கிழக்குத் தெருவை சேர்ந்த சுண்டக்கா (எ)ராஜி என்பவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் செல்லம்மாள் கொடுத்த புகாரியின் அடிப்படையில் சுண்டக்கா (எ) ராஜி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாத புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

பாஜக சார்பில் செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று, அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே உறுப்பினர் சேர்க்கைக்கான நாமக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாளை 12ம் தேதி நாமக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளையும் செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்துடன் கூடிய கலைஞர் அரங்கம், கழக பவள விழா நினைவு 60 அடி கொடி கம்பத்தில் கொடியேற்று விழா, மற்றும் உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (12ம் தேதி) நடைபெறுகிறது. அலுவலகத்துடன் கூடிய கலைஞர் அரங்கத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்க உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பரமக்குடிக்கு சென்ற கார் கமுதக்குடி சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதியது. இதில் காரில் உள்ளே இருந்த 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்தில் படையப்பா என்பவரின் இரண்டு கால்களும் உடைந்தன. பின்னர் பலத்த காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது” 2024-25 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.233.234 கூடுதல் கட்டிடம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல், தொலைபேசி:04286-299460 தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.