Namakkal

News March 27, 2024

நாமக்கல் ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தலைமையில் இன்று(27.03.2024) ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலில் 100 ஓட்டுப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் பொதுப்பார்வையாளர்‌ செல்வி ஹர்ஜித் கவுர் இ.ஆ.ப தேர்தல் செலவினப்பார்வையாளர்‌ அர்ஜுன் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

News March 27, 2024

நாமக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு 

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும், வேட்பாளர் தமிழ்மணி உருவம் பொறித்த போஸ்டர்கள் அதிக அளவு இரண்டு தினங்களாக ஒட்டப்பட்டுள்ளது. இது நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்…

News March 27, 2024

நாமக்கல் : 10 ம் வகுப்பில் 417 பேர் தனித் தேர்வர்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வு மையங்களில் 10, 335 மாணவர்களும் 9, 697 மாணவியர்களும் என மொத்தம் 20, 032 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை எட்டு தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில் 334 பேரும் அடங்குவார்கள்

News March 27, 2024

நாமக்கல்: பாவை கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு

image

நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் சேவை அமைப்பின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி உறுதி ஏற்பு இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நாமக்கல் ராசிபுரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பாவை கல்லூரி முதல்வர் தேசிய சேவை இளையோர் தொண்டர் ஷா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

நாமக்கல் ரூ.5 நாணயங்களாக செலுத்தி வேட்புமனு 

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் டெபாசிட் தொகை ர. 25 ஆயிரத்தை 5 ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி, தனது வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளராக இன்று 26.03.2024 தாக்கல் செய்தார். ரூ. 5 நாணயத்தை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சுமார் 1 மணி நேரம் எண்ணி கணக்கிட்டு அவருக்கு ரசீது வழங்கினார்கள்.

News March 26, 2024

நாமக்கல் ஆட்சியர் முன்னெச்சரிக்கை

image

நாமக்கல்லில் வரும் நாட்களில் கோடை வெயிலானது வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் கவனமாக இருக்கும் படியும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளான பருத்தி ஆடை, எடை குறைவான தளர்வான வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும்.மேலும் குடிநீர் எலுமிச்சை சாறு,இளநீர் பருக வேண்டும்.குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின் பற்ற வேண்டும் என ஆட்சியர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 26, 2024

நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டம்

image

நாமக்கல் அருள்மிகு ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர். தேர் வலம் வரும் வீதிகளில் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

News March 26, 2024

நாமக்கல்: மகளிர் கல்லூரியில் 100% வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு

image

வரும் ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையும், நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு மையமும் இணைந்து ‘வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘யினை கல்லூரி வளாகத்தில் 26/03/24 நடத்தியது.

News March 26, 2024

நாமக்கல்: தேர்தலுக்காக கூகுள் பே எண் வெளியிட்ட வேட்பாளர்

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன காந்தியவாதி ரமேஷ் போட்டியிடுகிறார். தனது தேர்தல் செலவுக்கு தன்னால் முடிந்ததை செலவு செய்து வருவதாகவும் தேர்தலுக்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதால் பொது மக்களாகிய நீங்கள் என் தேர்தல் செலவுக்கு பணம் தர கோரியுள்ளார். இதற்காக தனது கூகுள் பே 9994176591 எண்ணையும் சமுக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார் தற்போது இது பேச்சு பொருளாகி உள்ளது.

News March 26, 2024

நாமக்கல்: விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும்

image

மக்களவை 2024 தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி
வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோடு வேட்பாளராக அல்லது தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தகவல் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!