India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் கலாநிதி தலைமையில் இன்று 16ஆம் தேதி திங்கட்கிழமை மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி துணை மேயர் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

➤ நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
➤நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு
➤நாமக்கல் மாவட்டத்தில் உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தையொட்டி நாளை விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெறுகிறது.
➤சேந்தமங்கலம்: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
➤நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் செப் 20, 21, 22 மூன்று நாட்கள் விவசாய கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பால் பண்ணை தொழில் லாபம் ஈட்டுவதற்கான வழிகாட்டுதல், நெல் அறுவடை இயந்திரம் அதன் மூலம் தொழிலகம் ஈட்டுவதற்கான வழிகாட்டுதல், ஆகிய வழிகாட்டுதலான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்து விவசாய பெருமக்கள் கலந்து கொள்ளுமாறு ராசி அக்ரி மார்ட் சார்பாக தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பூக்களை இங்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். வெளியூரிலிருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். இன்று சம்பங்கி ரூ 160 -100க்கும், பட்டன் ரோஸ் ரூ 250-200 க்கும், பன்னீர் ரோஜா ரூ 80-50, அரளி ரூ 30, மல்லி ரூ 500-240 க்கும் விற்கப்படுகிறது.

நாமக்கல் அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இந்த பலபட்டரை மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. பின்னர் அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் சிறப்பு அபிஷேமும் சிறப்பு அலங்காரமாக தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று வருகின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கனி பூ விலை நிலவரம்: தக்காளி ரூ.26, சின்னவெங்காயம் ரூ.38, பெரியவெங்காயம் ரூ.58, கத்தரி ரூ.54, வெண்டை ரூ.20, அவரை ரூ.72, கொத்தவரை ரூ.26, முருங்கை ரூ.40, பீர்க்கன் ரூ.48 மற்றும் வாழைக்காய் ரூ.30. இதனிடையே நேற்று 1 கிலோ முருங்கைக்காய் ரூ.35க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.5 விலை உயர்ந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நாமக்கலில் 35 மையங்களில் 10,742 பேர், ராசிபுரத்தில் 20 மையங்களில் 6,093 பேர், திருச்செங்கோட்டில் 18 மையங்களில் 5,442 பேர் என மொத்தம் 22,277 தேர்வர்களில், 17,283 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 4,994 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, கறிக்கோழி விலை கிலோ ரூ.107ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.97ஆகவும் நீடித்து வருகிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோர் சால்வை அனுவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ராசிபுரம் – சேலம் சாலையில் தனியார் மண்டபம் எதிரே அதிமுக கொடி 55 அடி உயரத்தில் ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூரில் தாலுகா நூலகம் கிராமங்களில் 69 கிளை நூலகம், 48 ஊர்ப்புற நூலகம் 31 பகுதி நேர நூலகம் என 153 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட மைய நூலகம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. புதியதாக 15 இடங்களில் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.