India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். இந்நிலையில் குமாரபாளையம் பகுதியில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், கோடை விடுமுறையில் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கவும் பலர் தற்போது நீர் நிலைகளை தேடி செல்கின்றனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 143 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட நாடுகள் சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு யயாதி பெருவிழா வருகின்ற 9ம் தேதி செவ்வாய்க்கிழமை நாமக்கல் பரமத்தி ரோடு எஸ் பி எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.சங்கத்தின் தலைவர் ஜெய வேங்கடசுப்பிரமணியன் விழாவை தொடங்கி வைக்கிறார்.பொருளாளர் தங்கவேலு செயலாளர் நாராயணன் மற்றும் மாவட்ட இளைஞரணி,மகளிர் அணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 105.8 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா இன்று (05.04.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தேர்தல் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, 85-வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதியதில் சீராம்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகியோர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும், ஸ்ரீதர் என்பவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா, தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலையில் இன்று (5.4.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை 20 லிட்டர் குடிநீர் கேன்களில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல், திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கோவில் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 85 வயதுக்கு மேற்பட்ட 4113 வாக்காளர்களும், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 2546 வாக்காளர்களும் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு 130 மண்டல அலுவலர் தலைமையில் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குபதிவு செய்யும்பணி இன்றும், நாளையும் நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.