Namakkal

News April 8, 2024

அமைச்சர் மதிவேந்தன் வாக்கு சேகரிப்பு..

image

அமைச்சர் மதிவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து அப்ப நாயக்கன்பட்டி,போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ராசிபுரம் ஒன்றிய சேர்மன் ஜெகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

நாமக்கல்லில் இன்று இதற்கு தடை

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

நாமக்கல்லில் இன்று இதற்கு தடை

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

நாமக்கல்லில் போலீசார் ஆய்வு

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மரு கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாமக்கல்லில் “ரோடு ஷோ” மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக டிஐஜி உமா தலைமையில் நேற்று இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் உடன் இருந்தார்.

News April 7, 2024

ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

image

நாமக்கல், ராசிபுரம் அருகே மல்லூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தில் சோதனை செய்த போது, 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7.86 கோடி ஆகும்.

News April 7, 2024

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

image

மக்களவைத் 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா இன்று (7.4.2024) பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 7, 2024

நாமக்கல்: வாகனங்களை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்

image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா (7.4.24) நாமக்கல் – கரூர் மாவட்ட எல்லையில் உள்ள பரமத்தி வேலூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு சோதனை சாவடி வழியாக வருகை தந்த அனைத்து வாகனங்களை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

News April 7, 2024

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாமக்கல் வருகை

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும், கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் காலை 9 மணிக்கு நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள நான்கு தியேட்டர் முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரையில் மக்களைச் சந்திக்கும் வகையில் திறந்த வாகனத்தில் நின்றபடி அவா் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

News April 7, 2024

நாமக்கல்: இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

image

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் சேலம் கோபி மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ பரிசோதனை முகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.இதில் வார்டு கவுன்சிலர் கேசவன் பாலு மோகன்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்று சென்றனர்.இந்நிகழ்வில் மரு.மாதேஸ்வரன் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஸ் அருள் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News April 7, 2024

நாமக்கல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!

image

நாமக்கல் பூங்கா சாலையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும்.

error: Content is protected !!