Namakkal

News October 11, 2024

நாமக்கல்லில் பூக்கள் விலை குறைவு

image

நாமக்கல் பூ மார்க்கெட்டின் விலை நிலவரம்: நேற்று 600 ரூபாய்க்கு விற்கபட்ட மல்லிகை இன்று 400ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய பூக்களின் விலை நிலவரங்கள் சம்மங்கி ரூ.200-160, அரளி ரூ.150, மல்லி ரூ.400-240, பட்டன் ரோஸ் ரூ.300-240, பன்னீர் ரோஜா ரூ.100-70 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை என்பதால் அதிக அளவு பூக்கள் விற்பனை ஆகின்றன.

News October 11, 2024

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

image

நாமக்கல்: எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த +2 மாணவி – அரவிந்த் (23) ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கருவுற்று இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி உட்கொண்டிருக்கிறார். இதனால், அச்சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அரவிந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

News October 11, 2024

நாமக்கல்லுக்கு சீமான் வருகை

image

நாமக்கல்லில் இயங்கி வந்த மாவட்ட தலைமை மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்தும், ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றத்தை கண்டித்தும்,
வளையப்பட்டியில் சிப்காட் அமைப்பதை கண்டித்தும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் பூங்கா சாலையில் அக்.18ஆம் தேதி மாலை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ள உள்ளார்.

News October 11, 2024

நாமக்கல் மக்களே ரேஷன் கடையில் வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 11, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 11, 2024

நாமக்கலில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசியில் முட்டை நுகர்வு சற்று குறைவு என்பதால், விலையும் சற்று குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ரூ.5.05 என்று விற்பனை செய்யப்படுகிறது.

News October 10, 2024

நாமக்கல்லில் ரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு,இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 10, 2024

நாமக்கல் ஆட்சியர் புகார் எண்கள் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக உணவு கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், வீடுகள் தயாரிக்கப்படும் இனிப்பு கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும். இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

நாமக்கல்லில் தமிழக முதலமைச்சர் பயணம் மாற்றம்

image

நாமக்கல் பகுதியில் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகின்ற 15ஆம் தேதி வருவதாக இருந்தது. தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் நாள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் 16ஆம் தேதி நாமக்கல் வருகை புரிந்து முதலாவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா, அதனை தொடர்ந்து மதியம் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News October 10, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று (10.10.24) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!