India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மரு கேபி ராமலிங்கத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு பரமத்திவேலூர் மற்றும் வெண்ணந்தூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தேர்தல் பொதுத்தேர்வுகள் ஹர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 தேவைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களில் வெயில் அதிகரிக்கும், வெப்பநிலை 102 டிகிரி தாண்டும் என்று வானிலை ஆலோசனை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கோடை காலத்தில் ஒருவாரமாக 100 டிகிரி பாரன்ஹீட் ஆகும். நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்களவை 2024 பொதுத் தேர்தலை ஒட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இதனிடையே தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாமக்கல் மாவட்ட நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100% வாக்களிக்க வேண்டும் வாக்காளர் உதவி 1950 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மக்களவை 2024 பொதுத்தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக 2ம் தேதி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கினார். இதில் தேர்தல் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டம் அருகே ராசிபுரம் மல்லூரில் தேர்தல் பறக்கும்படையினர் இன்று(ஏப்.3) வாகன சோதனையில் ரூ.8.78 கோடி மதிப்பிலான 33 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.3) முதல் அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை, வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும், காற்று மணிக்கு முறையே 8 கீ.மீ முதல்10 கீ.மீ., வேகத்தில் தென் கிழக்கு திசையில் இருந்து வீசும் என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நாமக்கல், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, திருப்பத்தூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கலில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி ராசிபுரம்- 19, சேந்தமங்கலம்- 29, நாமக்கல்- 18, பரமத்தி வேலூா்- 26, திருச்செங்கோடு- 33, குமாரபாளையம்- 49 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் உமா இன்று தெரிவித்துள்ளாா். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
மக்களவைத் பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள், இன்று (2.4.2024) ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் மக்களவைத் தேர்தல் 2024-ல் முதல் முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவியர்கள் வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் அதிகாரிகள், பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
Sorry, no posts matched your criteria.