Namakkal

News April 5, 2024

நாமக்கல் திமுக தலைமை தேர்தல் பணிமனையில் ஆலோசனை கூட்டம்

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக மாவட்ட தலைமை தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தேர்தல் பணி சம்பந்தமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் மக்களிடையே எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும், கட்சி சாதனைகள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News April 4, 2024

இலவச மருத்துவம் முகாம்

image

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சேலம் கோபி மருத்துவமனை (ம) ராசிபுரம் தனியார் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் (07-04-2024) ஞாயிற்றுக்கிழமை அன்று ராசிபுரம் மேட்டு தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இம்முகாமில் காய்ச்சல் கண்காணிப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

News April 4, 2024

நாமக்கல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

மக்களவை 2024 பொதுத்தேர்தலில் முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவ்வப்போது தற்காலிக சோதனைச் சாவடிகளுக்கு சென்று வாகன சோதனையிலும் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார் இதனிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்த மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

காஞ்சிபுரம் டூ நாமக்கல் வரப் பெற்ற வாக்குப் பெட்டிகள்

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் 2024 தேவைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 4, 2024

நாமக்கல்: காரை சோதனை செய்த ஆட்சியர்

image

மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா காரை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சோதனையின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 4, 2024

நாமக்கல்: 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா். நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள கா்நாடக மாநில காவல் துறையினா், துணை ராணுவத்தினா் 190 போ் வந்துள்ளனா்.

News April 4, 2024

நாமக்கல் நகராட்சி பகுதியில் எம்எல்ஏ தேர்தல் பரப்புரை

image

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மாதேஸ்வரனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் P.ராமலிங்கம் வாக்கு சேகரித்தார். உடன் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News April 4, 2024

நாமக்கல்: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

image

நாமக்கல்லில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1 முதல் ஜூன் 3 வரையில் நடைபெறவுள்ளது. அனைத்து வயதினரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2024

நாமக்கல் பேருந்து உரிமையாளர் வீட்டில் ஐடி சோதனை

image

நாமக்கல் மாவட்ட காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும், பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை இன்று 03.04.2024 நடைபெற்று வருகிறது. தேர்தl சமயம் என்பதால் இவரது வீட்டில் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா ? என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!